செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முகமது பின் சல்மான்

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

Published On 2020-12-27 20:51 GMT   |   Update On 2020-12-27 20:51 GMT
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அந்நாட்டில் இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், சவுதியில் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. 

இதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த 17-ம் தேதி முதல் அந்நாட்டில் பைசர் கொரோனா தடுப்பூசி  மக்களுக்கு செலுத்தும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேற்று பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் வகையில் முகமது பின் சல்மான் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் 21 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசியின் 2-வது டோஸ் போடப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     
Tags:    

Similar News