செய்திகள்
கொரோனா வைரஸ்

துருக்கியில் ஒரே நாளில் 30103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-11-28 22:03 GMT   |   Update On 2020-11-28 22:03 GMT
துருக்கி நாட்டில் ஒரே நாளில் 30,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்தான்புல்:

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 18-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் துருக்கியில் ஒரே நாளில் 30,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5,78,347 ஆக உயர்ந்துள்ளது. 

துருக்கியில் கொரோனாவால் ஒரே நாளில் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,373 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை  3.96 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 1.68 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4,903 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Tags:    

Similar News