செய்திகள்
கோப்புப்படம்

சவுதி அரேபியாவில் கல்லறை தோட்டத்தில் குண்டு வெடிப்பு

Published On 2020-11-11 20:41 GMT   |   Update On 2020-11-11 20:41 GMT
சவுதி அரேபியாவில் கல்லறை தோட்டத்தில் முதலாம் உலகப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் செங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள துறைமுக நகரமான ஜெத்தாவில் கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு முதலாம் உலகப் போரின்போது உயிரிழந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முதலாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 102-வது ஆண்டு விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஜெட்டாவில் கல்லறை தோட்டத்தில் முதலாம் உலகப் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சர்வதேச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கல்லறை தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர். எனினும் குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது? சரியாக எத்தனை பேர் படுகாயம் அடைந்தனர்? என்பன குறித்த முழுமையான தகவல்களை சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை.
Tags:    

Similar News