செய்திகள்
டொனால்டு டிரம்ப் ஜூனியர்

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட டிரம்பின் மூத்த மகன்

Published On 2020-11-05 02:33 GMT   |   Update On 2020-11-05 02:33 GMT
அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது யார் என்பதில் ஜோ பைடன், டிரம்ப் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை வென்றெடுத்தால்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் ஜோ பைடன் அல்லது டொனால்டு டிரம்ப் அமர முடியும்.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு சாதகமாக அமைந்தது. அவர் அதிக எண்ணிக்கையிலான தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னேறினார்.



இதன்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளையும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு  டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் கணிப்பு குறித்து, டிரம்பின் மூத்த மகனான, டொனால்டு டிரம்ப் ஜூனியர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அதில் உலக வரைபடத்தை வெளியிட்டு, அதில் எந்தெந்த நாடுகளில், ஆதரவு உள்ளது என்பதை குறிக்கும் வகையில் டிரம்பின் குடியரசு கட்சியின் நிறமான சிவப்பு நிறத்தால் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஜோ பிடனுக்கு ஆதரவான நாடுகளில் அந்தக் கட்சியின் நிறமான, நீல நிறத்தில் குறிப்பிட்டார்.

இதில் இந்தியாவை நீல நிறத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானை சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜம்மு - காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அவர் குறிப்பிட்டிருந்தார். சீனாவுக்கு நீல நிறத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News