செய்திகள்
வெற்றியை பகிர்ந்து கொள்ளும் ஜோ பிடன், கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் - மிச்சிகன் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

Published On 2020-11-04 23:38 GMT   |   Update On 2020-11-04 23:38 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
 
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 248 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிச்சிகனில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அங்கு 16 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 264 இடங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்.

ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்காசின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News