செய்திகள்
வான் தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதல்: 7 அல்-கொய்தா தலைவர்கள் பலி

Published On 2020-10-27 08:06 GMT   |   Update On 2020-10-27 08:06 GMT
சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அங்கு பயங்கரவாத முகாம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் அமெரிக்க வான் தாக்குதலில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இட்லிப் என்ற இடத்தில் சந்தித்தபோது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் மத்திய கட்டுப்பாட்டு செய்தித்தொடர்பாளர் மேஜர் பெத் ரியார்டன் கூறும்போது, ‘வான் தாக்குதலில் 7 அல்-கொய்தா தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்க குடிமக்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் உலகளாவிய தாக்குதல்களுக்கு மேலும் சதி செய்யும் பயங்கராவத அமைப்பின் திறனை சீர்குலைக்கும். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பாதுகாப்பான புகலிடங்களை நிறுவுவதற்கு வடமேற்கு சிரியாவில் உள்ள உறுதியற்ற தன்மையை அல்-கொய்தா பயன்படுத்துகிறது’ என்றார்.
Tags:    

Similar News