search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா தாக்குதல்"

    • குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது.
    • சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள்.

    அங்காரா:

    சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது. துருக்கிக்கு இவர்கள் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார்கள். இதனால் இவர்களை ஒடுக்க துருக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    கிளர்ச்சியாளர்கள் வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இதை முறியடிக்கும் வகையில் அவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் துருக்கி பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    • சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அந்த நகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    • சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த கொடூர தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சிரியாவின் பாலைவனப் பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

    உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் இன்று பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதில், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் தொடர் தாக்குதல் நடத்தினர். மேலும், அப்பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இதே போல் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×