சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் - 53 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் - 53 பேர் பலி
Published on

டமாஸ்கஸ்:

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், சிரியாவின் பாலைவனப் பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com