செய்திகள்
மெலனியா டிரம்ப்

அடுத்த 4 ஆண்டுக்கு டிரம்ப் அதிபராக தொடர்வதே அமெரிக்காவுக்கு பலனளிக்கும் - மெலனியா

Published On 2020-08-26 13:28 GMT   |   Update On 2020-08-26 13:28 GMT
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய டிரம்ப் அரசு போராடி வருகிறது என அவரது மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை மாளிகையில் இருந்தபடியே வீடியோ காணொளி மூலம் அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கிழக்கு ஐரோப்பிய நாடான ஸ்லொவேனியாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறினேன். கம்யூனிச ஆட்சியில் இருந்த அன்றைய ஸ்லோவேனியாவில் தாம் வளர்ந்து வந்த போது அமெரிக்காவில் உள்ள சுதந்திரம் மற்றும் வாய்ப்புகள் பற்றி கேள்விப்பட்டு, 26 வயதில் அமெரிக்காவிற்கு வந்தேன்.

டொனால்டு டிரம்ப் முன்னேற்றத்தை உருவாக்கும் திறமை படைத்தவர். அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய டிரம்ப் அரசு போராடி வருகிறது 

டிரம்பை சந்தித்த நாளில் இருந்து அதை பார்த்து வருகிறேன். குறுகிய காலத்தில் டிரம்ப் செய்துள்ள சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். அடுத்த நான்காண்டுகளுக்கும் அதிபராக அவர் தொடர்வதே அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என தெரிவித்தார்.  
Tags:    

Similar News