செய்திகள்
ரஷிய அதிபர் புதின்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: மகளுக்கும் செலுத்தியதாக ரஷிய அதிபர் புதின் தகவல்

Published On 2020-08-11 09:33 GMT   |   Update On 2020-08-11 09:40 GMT
புதிதாக கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை மகள் உள்ளிட்டோருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ரஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News