செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது - டிரம்ப் சொல்கிறார்

Published On 2020-08-04 20:27 GMT   |   Update On 2020-08-04 20:27 GMT
இந்தியா கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியா இந்த வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். இந்தியா மற்றும் சீனாவைவிட நாங்கள் பெரியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மற்ற நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நாடும் இதை செய்யவில்லை” எனக் கூறினார்.
Tags:    

Similar News