செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்

30 வருடங்களுக்கு முன் ஒன்றாக படித்த பள்ளி நண்பர்கள் ஏற்பாடு செய்து சென்ற சுற்றுலா - பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி

Published On 2020-07-26 13:48 GMT   |   Update On 2020-07-26 13:48 GMT
வியட்நாமில் 30 வருடங்களுக்கு முன் பள்ளியில் ஒரே வகுப்பை படித்த நண்பர்கள் ஏற்பாடு செய்து சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஹனோய்:

வியட்நாம் நாட்டின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் டாங் ஹூ உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 1990 ஆம் ஆண்டு பயின்ற 
ஒரே வகுப்பை சேர்ந்த 40 மாணவர்கள் தங்கள் பள்ளிவகுப்புகளின் 30 ஆவது ஆண்டுவிழாவை கொண்டாட திட்டமிட்டனர்.

இதற்காக தற்போது வெவ்வேறு துறைகளில் வேலைசெய்துவந்த நண்பர்கள் அனைவரும் ரியூனியன் எனப்படும் மீண்டும் சந்தித்து ஒரு சுற்றுலா பயணம் 
மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, பள்ளி நண்பர்கள் அனைவரும் ஒரு பஸ்சில் குவாங் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். குவாங் மாகணத்தில் உள்ள அஸ்ப்ஹெட் சாலையின் செங்குத்து மலைப்பகுதியில்
பஸ் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக படித்த பள்ளி நண்பர்கள் ஏற்பாடு செய்து சென்ற சுற்றுலாவில் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

Tags:    

Similar News