செய்திகள்
கொரோனா வைரஸ்

ரஷ்யாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா - இன்று ஒரே நாளில் 6,615 பேருக்கு தொற்று - 130 பேர் பலி

Published On 2020-07-12 12:52 GMT   |   Update On 2020-07-12 12:52 GMT
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது.
மாஸ்கோ:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.   

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 130 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து  5 லட்சத்து ஓராயிரத்து 61 பேர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குணமடைந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News