செய்திகள்
ஹிரோகி புஜிதா

உலக வர்த்தக மையத்தில் சிகிச்சை பெற்ற ஜப்பான் நாட்டு கொரோனா நோயாளி குணமடைந்தார்

Published On 2020-07-08 10:33 GMT   |   Update On 2020-07-08 10:33 GMT
உலக வர்த்தக மையத்தில் சிகிச்சை பெற்ற ஜப்பான் நாட்டு கடைசி நோயாளியும் குணமடைந்த நிலையில் பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
துபாய்:

துபாய் உலக வர்த்தக மையத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டது. இங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக பலர் விரைவில் குணம் அடைந்து சென்றனர். தற்போது இங்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்தார். அவரது பரிசோதனை முடிவுகள் கொரோனா இல்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் அங்கு இருந்து நேற்று வசிப்பிடத்துக்கு திரும்பினார். அவரை சுகாதாரத்துறை ஊழியர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ஹிரோகி புஜிதா. அவர் தனக்கு சிறப்பான மருத்துவ சேவையினை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவருக்கு தற்காலிக மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் இப்ராகிம் அல் பலூசி பூங்கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தார். இத்தகவலை ஆரம்ப சுகாதார மைய துறையின் செயல் இயக்குனர் டாக்டர் மனால் தரிம் தெரிவித்தார்.
Tags:    

Similar News