செய்திகள்
நேபாள பிரதமர் ஒலி

திடீர் நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர்

Published On 2020-07-01 23:16 GMT   |   Update On 2020-07-01 23:16 GMT
நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி நெஞ்சு வலி காரணமாக காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
காத்மண்டு:

நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கேபி சர்மா ஒலி. எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுடன் நேபாள பிரதமர் ஒலிக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், இவர் சீன ஆதரவு நிலைபாட்டையே எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கேபி சர்மா ஒலிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் பிரதமர் சர்மா ஒலி வீடு திரும்பிவிட்டதாகவும், அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News