செய்திகள்
வடகொரிய அதிபர் மற்றும் தகர்க்கப்பட்ட கட்டிடம்

தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த வட கொரியா - பதற்றத்தில் கொரிய தீபகற்பம்

Published On 2020-06-16 22:48 GMT   |   Update On 2020-06-16 22:48 GMT
வட கொரியாவில் செயல்பட்டு வந்த கொரிய தகவல் தொடர்பு அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சியோல்:

கொரிய தீபகற்பத்தில் வடக்கு மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை களைய உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், இந்த பிரச்சனைக்கும் வெகு ஆண்டுகளாக தீர்வு காணாமல் உள்ளது.

இதற்கிடையில், வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி யோ ஜோங் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள தொடங்கியுள்ளார். இவரின் ஆட்சி நடைமுறை குறித்து இதுவரை யாருக்கும் எந்த விவரமும்
தெரியவில்லை.  

தனது அண்ணனை விட மிகவும் ஆக்ரோஷமான முடிவுகளையே இவர் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தென்கொரிய எல்லையில் இருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிரான எழுத்துக்களுடன் பலூன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பறக்கவிடப்பட்டன. 

உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்ப்படுத்த 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் கொரிய தகவல் தொடர்பு கட்டிடம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் தென்கொரியாவின் செலவில் கட்டப்பட்டது. 



அமெரிக்காவுடனான அனு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததில் இருந்தே இந்த கட்டிடம் செயல்படாமல் இருந்தது.

இந்த கட்டிடம் இதற்கு முன்னதாக வட மற்றும் தென் கொரிய நாட்டினர் இரு நாட்டு உறவை மேம்படுத்த முக்கிய பங்காற்றியது.  தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முற்றிலும் மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதகாக உருவாக்கப்பட்ட அந்த கட்டிடத்தை வடகொரியா குண்டு வைத்து தகர்த்துள்ளது. கொரிய தகவல் தொடர்பு கட்டிடம் தகர்க்கப்படும்
வீடியோவை வடகொரியா தனது அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது.  

இந்த நடவடிக்கை மூலம் வடகொரியா தனது எதிரி நாடாக கருதும் தென்கொரியாவை எச்சரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் இரு நாட்டுக்கும் இடையே மீண்டும்
பதற்றதை அதிகரித்துள்ளது. 
Tags:    

Similar News