செய்திகள்
சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் குழந்தைகள் (பழைய படம்)

ஆரம்ப பள்ளிகளை திறந்து லாக்டவுனை தளர்த்தும் முயற்சியில் இறங்கியது இங்கிலாந்து

Published On 2020-06-01 12:55 GMT   |   Update On 2020-06-01 12:55 GMT
இங்கிலாந்தில் கடந்த இரண்டு மாதத்திற்குப் பிறகு இன்று முதன்முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதிகமான பரிசோதனை, ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் காரணமாக கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மிகவும் முன்னெச்சரிக்கையுடன் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்கான ஊழியர்கள் ஆகியோருக்காக பள்ளிகள் திறந்த இருந்தன.

இந்நிலையில் இன்று லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பினர். என்றாலும் 2-வது கட்ட கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் என்ற அச்சத்தால் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சினர்.

‘‘அரசு மிக எச்சரிக்கையுடன் தற்காலிகமாக லாக்டவுனை தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. என்றாலும், நடவடிக்கைகள் தொடர்ந்து ஆராயப்படும். ஒரேயொரு விஷயம் என்னவென்றால் யாரும் 2-ம் கட்ட பரவலை விரும்பவில்லை’’ என்று இங்கிலாந்து வர்த்த செயலாளர் அலோக் ஷர்மா தெரிவித்தார்.

பள்ளிக்கூட அறைகளில் சானிடைசைர் மற்றும் சுகாதாரம் தொடர்பான வழிமுறைகள் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து அவர்களுடைய சூழ்நிலையை பொறுத்து தற்காலிக தளர்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

வேல்ஸ் நாட்டில் இன்னும் பள்ளிகளுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஆகஸ்ட் மாத்தில் இருந்துதான் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News