செய்திகள்
தென்ஆப்பிரிக்க ஏர்வேஸ் விமானம் - கோப்புப்படம்

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை

Published On 2020-05-21 06:26 GMT   |   Update On 2020-05-21 06:35 GMT
26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட சுமார் 150 இந்தியர்கள் தென்ஆப்பிரிக்க ஏர்வேஸ் விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஜோகனஸ்பர்க்:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பணிக்காக 26 இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவுக்கு சென்றனர். பணி முடிந்து, அவர்கள் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு திரும்பியபோது, விமானசேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில், 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட சுமார் 150 இந்தியர்கள் தென்ஆப்பிரிக்க ஏர்வேஸ் விமானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தென்ஆப்பிரிக்காவில் சிக்கித்தவிக்கும் மீதம் உள்ள 800-க்கு மேற்பட்டோர் அடுத்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இந்திய துணைத்தூதர் அஞ்சு ரஞ்சன் தெரிவித்தார்.
Tags:    

Similar News