செய்திகள்
கோப்பு படம்

இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு

Published On 2020-05-11 07:01 GMT   |   Update On 2020-05-11 07:01 GMT
இலங்கையில் பொருளாதார சரிவை மீட்க தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார சரிவை மீட்க தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று முதல் வழங்க உள்ளதாக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் செல்ல புதிய நடைமுறையை இன்று முதல் அமல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி மக்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் உள்ள எண்களில் கடைசி இலக்கத்தை அடிப்படையாக கொண்டு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் இறுதி இலக்கம் 1, 2 இருந்தால் அவர்கள் திங்கட்கிழமையும், 3, 4 இருந்தால் செவ்வாய்க்கிழமையும், 5 6 எண்கள் இருந்தால் புதன் கிழமையும், 7 மற்றும் 8 என்ற இறுதி இலக்கை கொண்டு அடையாள அட்டைக்காரர்கள் வியாழக்கிழமையும், 9, 0 எண் கொண்ட அடையாள அட்டைக்காரர்கள் வெள்ளிக்கிழமையும் வெளியில் செல்ல முடியும்.

Tags:    

Similar News