செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்ட நபர்

10 லட்சத்தை நெருங்கிய கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Published On 2020-04-29 22:51 GMT   |   Update On 2020-04-29 22:51 GMT
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் குணமடைந்தனர்.
ஜெனீவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 97 ஆயிரத்தை கடந்துள்ளது. 



தற்போதைய நிலவரப்படி, 32 லட்சத்து 7 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 82 ஆயிரத்து 957 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 806 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 லட்சத்து 97 ஆயிரத்து 120 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா - 1,45,345
ஸ்பெயின் - 1,32,929
இத்தாலி - 71,252
பிரான்ஸ் - 48,228
ஜெர்மனி - 1,20,400
துருக்கி - 44,040
ரஷியா - 10,286
ஈரான் - 73,791
சீனா - 77,578
பிரேசில் - 34,132
கனடா - 20,100
பெல்ஜியம் - 11,283
பெரு - 10,037
சுவிட்சர்லாந்து - 22,600
அயர்லாந்து - 13,386
மெக்சிகோ - 11,423
ஆஸ்திரியா - 12,779
Tags:    

Similar News