செய்திகள்
பிரம்பு அடி

இந்தோனேசியாவில் ஊரடங்கின் போது ஓட்டல் அறையில் உல்லாசம் - ஜோடிக்கு 40 முறை பிரம்பு அடி

Published On 2020-04-23 07:29 GMT   |   Update On 2020-04-23 07:29 GMT
ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத ஜோடி ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்த குற்றத்திற்காக இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர்.
பண்டா ஏஸ்:

இந்தோனேசியாவின் ஏஸ் மாகாணத்தில் மதச் சட்டத்தை மீறுபவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக
அந்நாட்டில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. என்றபோதிலும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவது கணிசமாக குறைந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழலிலும் மாகாண தலைநகர் பண்டா ஏஸில் நேற்று முன்தினம் இரவு, பகுதி நேர ஊரடங்கை மீறி திருமணம் ஆகாத ஒரு ஜோடி ஓட்டலில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து உள்ளது. இதை துப்பறிந்த மாகாண போலீசார் அவர்களை பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தலா 40 முறை பிரம்பு அடி கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர். இதேபோல் மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 தடவை பிரம்பு படி கிடைத்தது.

பொதுவாக இதுபோல் வழங்கப்படும் தண்டனைகளை நூற்றுக்கணக்கானோர் கூடி நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். ஆனால், பகுதி நேர ஊரடங்கு காரணமாக 10, 15 பேர் மட்டுமே இதை காண்பதற்கு வந்திருந்தனர். இவர்களும் கூட முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி, தள்ளித் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தனர்.
Tags:    

Similar News