செய்திகள்
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளி

கொரோனா வைரஸ் தாக்குதல் - உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-04-05 05:56 GMT   |   Update On 2020-04-05 05:56 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 12  லட்சத்தை தாண்டியது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இதில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News