செய்திகள்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ்

கொரோனா, கட்டுப்படுத்தக்கூடியது - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Published On 2020-03-12 21:43 GMT   |   Update On 2020-03-12 21:43 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக இதனை கட்டுப்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா:

உலகம் முழுவதும் ‘கோவிட்-19’ என்ற கொரோனா உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. நோய் தடுப்பு முறைகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் ஜெனீவாவில் உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று. அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக இதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News