செய்திகள்
பள்ளத்தாக்கில் பஸ் விழுந்த பகுதி

பாகிஸ்தானில் கோர விபத்து- பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி

Published On 2020-03-09 09:41 GMT   |   Update On 2020-03-09 09:44 GMT
பாகிஸ்தானில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப்பாதையில் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து இன்று காலை ஸ்கார்டு பகுதிக்கு சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றது. கில்கிட் அருகே உள்ள ராவுண்டு என்ற இடத்தில், மலைப்பாதையில் சென்றபோது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

தாறுமாறாக ஓடிய பேருந்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனால் பேருந்து கடுமையாக சேதமடைந்து, பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 23 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கில்கிட் பல்டிஸ்தான் ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News