செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரசுக்கு இத்தாலியில் ஒருவர் பலி

Published On 2020-02-22 06:21 GMT   |   Update On 2020-02-22 06:21 GMT
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 78 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலி:

கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மக்காவ், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 78 வயதான முதியவர் ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இத்தாலி சுகாதார மந்திரி ராபார்ட்டோ கூறும்போது, “வெனேடோ பகுதியில் உள்ள வடக்கு மண்டலத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 நகரங்களில் உள்ள பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மத கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News