செய்திகள்
ரத்தன் டாடா

ரத்தன் டாடாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்- இங்கிலாந்து பல்கலைக்கழகம் வழங்கியது

Published On 2020-02-19 03:22 GMT   |   Update On 2020-02-19 03:22 GMT
இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் தொழில் அதிபரும், முன்னாள் டாடா குழுமத் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
லண்டன்:

தொழில் அதிபரும், முன்னாள் டாடா குழுமத் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் சிறப்பித்தது.

மனிதநேயம், சமூக பொறுப்புணர்வு, புதிய கண்டுபிடிப்புகளில் அவரது பங்களிப்பிற்காக இந்த கவுரவ பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் டேம் நான்சி ரோத்வெல் கூறும்போது. “82 வயதான ரத்தன் டாடா பெருவணிகம் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். எங்கள் பல்கலைக்கழக மாணவர்களும் அவரை முன்மாதிரியாக கொண்டு வருங்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.
Tags:    

Similar News