செய்திகள்
எகிப்து பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

எகிப்தில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2020-02-13 00:56 GMT   |   Update On 2020-02-13 00:56 GMT
எகிப்து நாட்டில் வடக்கு சினாய் மாகாணத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பயங்கரவாதிகள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கைரோ:

ஆப்பிரிக்கா நாடுகளான எகிப்து, மாலி, பர்கினோ பசோ, நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த குழுக்கள் அவ்வப்போது பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே மோதல் சம்வங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தின் அல் அரிஷ் நகர் அல் அபேய்டெட் பகுதியில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அப்பகுதியில் நேற்று போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இரு தரப்பிற்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச்சூட்டில் 17 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 10-ம் தேதி ராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த இருந்த 10 பயங்கரவாதிகளை எகிப்து ராணுவத்தினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News