செய்திகள்
ஆப்கன் ராணுவ வீரர் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் 18 தலிபான்கள் பலி

Published On 2020-02-08 12:24 GMT   |   Update On 2020-02-08 12:24 GMT
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 18 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்திவருகின்றனர். 

ராணுவத்தினரின் தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகளும் அவ்வப்போது பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். 

இதற்கிடையில் தலிபான் பயங்கரவாதிகள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பல கிராமங்களை மீட்டுவருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் லக்மேன் மாகாணத்தில் கடந்த இரண்டு வாரங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டைகளில் தலிபான் கமாண்டர் உள்பட 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அதிரடி நடவடிக்கையில் தலிபான் பிடியில் இருந்த பல கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
Tags:    

Similar News