செய்திகள்
செல்போன் பயன்படுத்த தடை

21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதா - அமெரிக்க செனட்டில் தாக்கல்

Published On 2020-01-13 19:08 GMT   |   Update On 2020-01-13 19:08 GMT
21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கோரும் மசோதாவை அமெரிக்க செனட் சபையில் ஜான் ரோட்ஜர்ஸ் தாக்கல் செய்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்க செனட் சபையில், வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்த 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போதிய முதிர்ச்சி கிடையாது என்றும், செல்போன் மூலம் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையும், ரூ.72 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், “இந்த மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை, ஒரு விழிப்புணர்வுக்காகவே தாக்கல் செய்தேன்“ என்று செனட் உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் தெரிவித்தார்.
Tags:    

Similar News