செய்திகள்
அமெரிக்க பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுத்த மத்திய மந்திரி - புதிய சர்ச்சை

Published On 2019-12-22 00:32 GMT   |   Update On 2019-12-22 00:32 GMT
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபாலை சந்திக்க மறுத்த இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வா‌ஷிங்டன்:

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டின் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க ஏற்பாடு ஆகி இருந்தது.

ஆனால் அந்த குழுவில், இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் இடம் பெற்றிருந்ததால், அந்தக் குழுவையே சந்திக்க ஜெய்சங்கர் மறுத்து விட்டார்.

இதற்கு காரணம், கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல் சாசன பிரிவு 370-ஐ இந்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், அங்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளை இந்தியா விலக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் கொண்டு வந்ததுதான்.

இதை நிருபர்கள் மத்தியில் பேசியபோது ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டார்.  ஜெய்சங்கரின் இந்த செயல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிற செனட் சபை எம்.பி.க்கள் பெர்னி சாண்டர்சும், எலிசபெத் வாரனும் மேலும் 2 எம்.பி.க்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அவர்கள், அமெரிக்க எம்.பி.க்களின் குரலை ஒடுக்க ஜெய்சங்கரும், இந்தியாவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
Tags:    

Similar News