செய்திகள்
நன்கொடையாக வழங்கப்பட்ட மின்சார வாகனங்கள்

இந்திய அரசு சார்பில் நேபாளம் பசுபதிநாத் கோவிலுக்கு 2 மின்சார வாகனங்கள் நன்கொடை

Published On 2019-11-27 13:36 GMT   |   Update On 2019-11-27 13:36 GMT
நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு இந்திய அரசு இரு மின்சார வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
காத்மண்டு:
 
நேபாளத்தில் அமைந்துள்ளது பசுபதிநாத் கோவில். இந்த கோவில் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் நேபாளத்தில் பல்வேறு நலப்பணிகளை இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இரு மின்சார வாகனங்களை இந்தியா இன்று நன்கொடையாக வழங்கியது.

நேபாளத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியா சார்பில் 8 சீட்டுகள் அடங்கிய 2 மின்சார வாகனங்களை நன்கொடையாக வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் நேபாளத்துக்கான இந்திய தூதர் மஜ்சீவ் சிங் பூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News