செய்திகள்
விபத்துகுள்ளான விமானம்

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

Published On 2019-11-20 11:02 GMT   |   Update On 2019-11-20 11:02 GMT
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.
காபூல்:

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அல்கொய்தா, தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க ராணுவபடைகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 13 ஆயிரம் அமெரிக்க ராணுவ படையினர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் மீது தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் எந்த இடத்தில் ஹலிகாப்டர் விபத்துக்குளானது? இறந்த ராணுவ வீரர்கள் யார்-யார்? என்ற விவரங்களை ராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதற்கிடையே அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். சார்க் மாவட்டத்தில் உள்ள லோகார் பகுதியில் ஹெலிகாப்டரை அதிகாலை 1 மணிக்கு சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.

ஆனால் இதை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.
Tags:    

Similar News