செய்திகள்
இலங்கை வாக்குப்பதிவு

இலங்கை அதிபர் தேர்தலில் 80 சதவீதம் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2019-11-16 13:37 GMT   |   Update On 2019-11-16 13:37 GMT
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொழும்பு:

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிட்டார். மொத்தம், 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் அதிபர் தேர்தலில், 24 ஆயிரத்தும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News