செய்திகள்
ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி

சவுதி அரேபியாவில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2019-10-29 09:13 GMT   |   Update On 2019-10-29 09:13 GMT
சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று இருநாள் அரசுமுறை பயணமாக ரியாத் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரியாத்:

சவுதி அரேபியா மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறை பயணமாக டெல்லியில் இருந்து நேற்றிரவு சவுதி அரேபியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த  பயணத்தின்போது, சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சவுத்தை மோடி சந்தித்து பேசுகிறார்.

சவுதி அரேபியாவின் சில மந்திரிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



இந்தியா-ஜோர்டான் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, மனிதவளம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக மோடியும் இரண்டாம் அப்துல்லாவும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக, சவுதி அரேபியா நாட்டின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் வேளாண்மைத்துறை மந்திரி அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மோஷேன் அல்-ஃபட்லி மற்றும் எரிசக்தி துறை மந்திரி அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல் சவுத் ஆகியோரை யும் சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News