செய்திகள்
இம்ரான் கான்

மீண்டும் பின்னடைவு: கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் -நிதி நடவடிக்கை அதிரடி குழு

Published On 2019-08-23 09:15 GMT   |   Update On 2019-08-23 09:15 GMT
இரண்டாவது முறையாக பாகிஸ்தான் நிதி நடவடிக்கை அதிரடி குழுவின் ஆசியா-பசிபிக் பிரிவின் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
சிட்னி:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் லடாக்-ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை ஐ.நா பொதுசபைக்கு கொண்டு சென்றது.

ஆனால், அங்கு பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

நிதி நடவடிக்கை அதிரடி குழுவின்  ஆசியா-பசிபிக் பிரிவு, நிதி மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு நேற்று ஆஸ்திரேலியாவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.



இந்த ஆலோசனையில் பாகிஸ்தானை கருப்பு பாடியலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதில் இருக்கும் 40 காரணிகளில் 32 காரணிகளில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் இந்த நிதியை கட்டுப்படுத்துவதற்காகவும் எவ்வித நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.

இதன் விளைவாக பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் கிரே பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் நடந்த ஆலோசனையில் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக அக்டோபர் மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆசியா-பசிபிக் குழுவின் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் தற்போது இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவாகவும், பொருளாதாரத்தை பாதிக்கும் முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News