செய்திகள்
மரியம் நவாஸ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு ஆகஸ்ட் 21 வரை விசாரணை காவல்

Published On 2019-08-09 14:59 GMT   |   Update On 2019-08-09 14:59 GMT
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் மகள் மரியம் நவாசை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அந்நாட்டு தேசிய பொறுப்புடமை முகமை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில், நவாஸ் ஷரீப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாசை சிறையில் வைத்தே பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை முகமை  அதிகாரிகள் நேற்று கைது செய்ததது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மரியம் நாவாஸ் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மரியம் நவாசை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

Similar News