செய்திகள்
விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நவாஸ் உறவினர்கள்

ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நவாஸ் செரீப் உறவினர்கள்

Published On 2019-08-03 04:42 GMT   |   Update On 2019-08-03 04:42 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் ஹஜ் பயணத்தின் போது விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.
லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உறவினர்கள் யூசுப் அப்பாஸ் மற்றும் அப்பதுல் அஜிஸ். சகோதரர்கள் ஆன இருவரும் நேற்று முன்தினம் ஹஜ் புனித பயணத்திற்காக லாகூரில் இருந்து மதினா செல்லும் விமானத்தில் ஏறி இருந்தனர்.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக குடியுரிமை அதிகாரிகள், அவர்கள் பயணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புதிய விதியின்படி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த புதிய உத்தரவின்படி நவாஸ் செரீப் உறவினர்கள் ஹஜ் பயணம் செல்வதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் இருவர் மீதும் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News