செய்திகள்
போரம் - போரமின் சொந்த வீடு

6 வயது சிறுமியின் மாத வருமானம் இத்தனை கோடியா? -சொந்த வீடும் ரெடி

Published On 2019-07-29 03:14 GMT   |   Update On 2019-07-29 03:14 GMT
தென் கொரியாவைச் சேர்ந்த சிறுமியின் மாத வருமானம் கோடிகளை தொட்டுள்ளது. சொந்த வீடும் வாங்கியுள்ளார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
சியோல்:

தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. மழலை மாறாமல் இவர் கூறும் ரிவ்யூ கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உள்ளனர்.

இந்த சேனலில் போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இவர், யூ டியூப் ஸ்டாராக அனைவரின் மனதிலும் வலம் வருகிறார்.



போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதில், போரமின் சேனலை 31 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவரது சேனலின் பார்வையாளர்களும் ஆக்டிவில் உள்ளனர். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.





Tags:    

Similar News