செய்திகள்

மாலத்தீவு வெள்ளிக்கிழமை மசூதியை பாதுகாக்க இந்தியா உதவி செய்யும்- மோடி உறுதி

Published On 2019-06-08 16:47 GMT   |   Update On 2019-06-08 16:47 GMT
மாலத்தீவில் உள்ள பழமையான வெள்ளிக்கிழமை மசூதியை புனரமைத்து பாதுகாப்பதற்கு இந்தியா உதவி செய்யும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாலி:

மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலத்தீவு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாலத்தீவின் சின்னமான வெள்ளிக்கிழமை மசூதியை புனரமைத்து பாதுகாப்பதற்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்கும். பவளக் கற்களால் கட்டப்பட்ட இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க மசூதி உலகின் எந்த பகுதியிலும் இல்லை. 

மாலத்தீவுகள் நிலையான வளர்ச்சியை நோக்கி கடுமையாக பணியாற்றுவதுடன், சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பின்  ஒரு பகுதியாக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவின் உதவியுடன் மசூதியை புனரமைப்பதற்கு உதவ முன்வந்துள்ள இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ் நன்றி தெரிவித்தார். 

1658-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வெள்ளிக்கிழமை மசூதி, மாலி நகரின் பழமையான மற்றும் மிகவும் அழகான மசூதிகளில் ஒன்று. 2008ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News