செய்திகள்

சிரியாவில் கார்குண்டு தாக்குதல் - ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி

Published On 2019-06-02 08:23 GMT   |   Update On 2019-06-02 08:23 GMT
சிரியா நாட்டில் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ரக்கா நகரில் பயங்கரவாதிகளின் கார்குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த  ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ரக்கா நகரின் புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,   ரக்கா நகரத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர் ரக்கா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தங்களிடம் பிடிபடும் கைதிகளின் தலைகளை துண்டித்து அவர்கள் கோரத்தாண்டவம் ஆடிய அல்-நய்ம் சதுக்கம் அருகே இந்த தாக்குதல் நடந்ததால் இது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கும் என கருதப்படுகிறது.
Tags:    

Similar News