செய்திகள்

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியது- 14 பேர் பலியானதாக தகவல்

Published On 2019-05-07 05:10 GMT   |   Update On 2019-05-07 05:10 GMT
மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 14 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. #MexicoJetCrashed #PlaneCrashed
மெக்சிகோ சிட்டி:

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மெக்சிகோவின் மான்டிரே நகருக்கு தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில், 14 பேர் பயணித்ததாக தெரிகிறது. அந்த விமானம், கோகுய்லா வான்பகுதியில் பறந்தபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விமானம் காணாமல் போன பகுதியில் அதிகாரிகள், ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தபோது, விமானத்தின் உடைந்த பாகங்கள் நேற்று கண்டறியப்பட்டன. அது காணாமல் போன விமானத்தின் பாகங்களை ஒத்தியிருப்பதாக கோகுய்லா விமான நிலைய தலைவர் கூறியுள்ளார்.

விமானத்தின் இறக்கைகள், வால் பகுதி மற்றும் பிற பாகங்கள் தரையில் சிதறி கிடப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியாகின. விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். விமான பாகங்கள் கிடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். #MexicoJetCrashed #PlaneCrashed
Tags:    

Similar News