செய்திகள்

தேவாலய குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் உற்சாகத்தில் திளைத்த குழந்தைகள்

Published On 2019-04-23 05:51 GMT   |   Update On 2019-04-23 06:32 GMT
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #SrilankanBlast #PrayerPictures
கொழும்பு:

இயேசு கிறிஸ்து  சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள்  உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா 'ஈஸ்டர் பண்டிகை' ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.

இந்த விழா ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில்,  புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களும் பண்டிகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, கடந்த ஞாயிறு அன்று  அனைத்து தேவாலயங்களிலும் கொண்டாட்டங்கள், பிரார்த்தனை கூட்டங்கள்,  குழந்தைகளின் இனிய குரலில் இயேசு கிறிஸ்து குறித்த பாடல்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த ஈஸ்டர் பெருநாளில் உலகையே உலுக்கிய சம்பவம் அரங்கேறியது. இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு நாட்டையே மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இதில் 310 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குழந்தைகளின் ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், மக்களின் பிரார்த்தனை கூட்டங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் குழந்தைகளின் சிரிப்பு அலை, மக்களின் ஆத்மார்த்தமான பிரார்த்தனை இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் தேவாலயத்திற்கு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். உள்ளே தேவாலயத்தில் பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. இதில் விளையாடிக் கொண்டிருந்த 14 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக பலியாகினர்.

குழந்தைகளின் கொண்டாட்டம் சில நிமிடங்களில் குண்டு வெடிப்பில் மறைந்த சம்பவம், மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  #SrilankanBlast #PrayerPictures






Tags:    

Similar News