செய்திகள்

வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியாவில் வெப்ப காற்று தாக்குதல் - 44 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2019-01-25 05:30 GMT   |   Update On 2019-01-25 05:30 GMT
ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 44 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Australia #heatwave
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெயில் வாட்டுகிறது.

அடிலெய்டு வடக்கு பகுதியில் நேற்று 49.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் பதிவாகியுள்ளது. அடிலெய்டு நகரில் 47.7 டிகிரி பதிவானது. இது 1939-ம் ஆண்டில் பதிவான வெப்பத்தை விட அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே நிலை தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 13 நகரங்களில் நிலவுகிறது. வெப்பத்தின் கடுமையில் இருந்து தப்பிக்க மக்களுக்கு குளிர்ச்சியான பீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கள் மர நிழலில் தஞ்சமடைந்துள்ளனர். கடும் வியர்வையில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக உள்ளது. இதனால் பலவிதமான வெப்ப நோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



வெப்பக்காற்று தாக்குதலால் தெற்கு ஆஸ்திரேலியாவில் 90 குதிரைகள் இறந்தன. பல உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #Australia #heatwave

Tags:    

Similar News