செய்திகள்

கொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்

Published On 2019-01-18 05:56 GMT   |   Update On 2019-01-18 05:56 GMT
கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஐ.நா. கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. #UN #ColombiaBombAttack
நியூயார்க்:

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த  தாக்குதலுக்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.



 'ஏற்றுக்கொள்ள முடியாத குற்றவியல் சம்பவம் நடந்துள்ளது. வன்முறையில் இருந்து விலகி, வளமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்’ என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இக்குண்டுவெடிப்பு, நகரின் தெற்கில் ஜெனரல் சன்டர்டர் அகாடமியில் ஒரு விழாவின் நிறைவில் நடைபெற்றுள்ளது. இதுவரை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #UN #ColombiaBombAttack
 
Tags:    

Similar News