செய்திகள்

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் 40 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2018-12-29 11:18 GMT   |   Update On 2018-12-29 11:18 GMT
எகிப்து நாட்டின் காசா மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்த தாக்குதலை தொடர்ந்து 40 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Egypttouristbusattack #40militantskilled #touristbusattack
கெய்ரோ:

எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர்.

அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற பகுதி வழியாக சென்றபோது சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.


இதில் அந்தப் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் இருந்த வியட்நாம் நாட்டினர் மூன்றுபேர்  மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து கிசா, வடக்கு சினாய் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பயங்ரவாதிகளை குறிவைத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Egyptpolice #Egypttouristbusattack #40militantskilled  #touristbusattack
Tags:    

Similar News