செய்திகள்

போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி

Published On 2018-12-16 09:27 GMT   |   Update On 2018-12-16 09:55 GMT
போர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #portugalHelicoptercrash #HelicopterAmbulancecrash
லிஸ்பான்:

போர்ச்சுகல் நாட்டில் தொலைதூர பகுதிகளில் இருக்கும் நோயாளிகளை முக்கிய பெருநகரங்களுக்கு கொண்டு வருவதற்காகவும், நோயாளிகளை சந்தித்து அவசர சிகிச்சை அளிப்பதற்காகவும் கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

அவ்வகையில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 76 வயது முதியவரை ஏற்றிவந்து போர்ட்டோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பிராகான்க்கா மாவட்டத்தை நோக்கி நேற்றிரவு திரும்பிச்சென்ற ஒரு  ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சிறிது நேரத்தில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

கோப்பு படம்

இந்நிலையில், மலைகள் சூழ்ந்த சால்ட்டோ என்னுமிடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் இருந்த இரு விமானிகள், ஒரு டாக்டர் மற்றும் துணை மருத்துவர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.  #portugalHelicoptercrash #HelicopterAmbulancecrash
Tags:    

Similar News