செய்திகள்

உயிர்ப்பலி வாங்கும் இ கோலி பாக்டீரியாவால் அமெரிக்கா-கனடாவில் பீதி: கீரை மூலம் பரவுகிறது

Published On 2018-11-22 13:02 GMT   |   Update On 2018-11-22 13:02 GMT
அமெரிக்கா- கனடா நாடுகளின் மக்கள் ரோமெயின் என்ற கீரையை அதிகம் பயன்படுத்துவதால் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. எனவே இந்த கீரையை பார்த்தாலே மக்கள் பீதியடையும் நிலை உள்ளது. #Ecolibacteria #Spinach
வாஷிங்டன்:

அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

கடந்த கோடை காலத்தில் அமெரிக்காவில் 5 பேர் இந்த பாக்டீரியா தாக்குதலால் உயிரிழந்தனர். இ கோலி பாக்டீரியா எப்படி மனிதனை தாக்குகிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்தன.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் ரோமெயின் என்ற கீரையை மக்கள் அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். இந்த கீரையில் இ கோலி பாக்டீரியா பரவி அவை மனிதனை தாக்குவது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கீரையை யாரும் பயன்படுத்த வேண்டாம். கடைகளிலும் இவற்றை விற்க கூடாது என்று அமெரிக்கா, கடனா அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் இந்த கீரையை பார்த்தாலே மக்கள் பீதியடையும் நிலை உள்ளது.

தற்போது அமெரிக்காவில் 32 பேரும், கனடாவில் 18 பேரும் இ கோலி பாக்டீரியா தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாக்டீரியா மேலும் பரவராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. #Ecolibacteria #Spinach
Tags:    

Similar News