செய்திகள்

சூரியன் அருகே பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

Published On 2018-11-16 06:17 GMT   |   Update On 2018-11-16 06:17 GMT
சூரியன் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது. #NewPlanet

நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது.

இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை.

தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #NewPlanet

Tags:    

Similar News