செய்திகள்

ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2018-10-26 04:09 GMT   |   Update On 2018-10-26 04:09 GMT
ஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. #JapanEarthquake
டோக்கியோ:

உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.



இந்நிலையில் ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹொக்கைடோவின் ராவுசு பகுதியில் இருந்து 60 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருப்பதாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜாகின்தோஸ் தீவில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இயோனியன் கடற்பகுதியில் உள்ள இந்த தீவின் தென்மேற்கில் பூமிக்கடியில் 35.9 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.  #JapanEarthquake

Tags:    

Similar News