செய்திகள்

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு - இந்திய சுற்றுலாப் பயணி உள்ளிட்ட 2 பேர் பலி

Published On 2018-10-08 08:31 GMT   |   Update On 2018-10-08 08:31 GMT
தாய்லாந்தில் இரண்டு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். #ThaiShooting #IndianTouristKilled
பாங்காக்:

தாய்லாந்தின் மத்திய பாங்காங்கில் உள்ள ரத்சதேவி பகுதியில் பிரபல சென்ட்ரா வாட்டர்கேட் பெவிலியன் ஓட்டல் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தருவார்கள். அந்த ஓட்டலின் வாகன நிறுத்துமிடம் அருகே ஒரு கிளப் உள்ளது. அந்த கிளப்பில் நேற்று இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பின்னர் வீதிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.



அப்போது, ஓட்டலுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்தவர்கள் மீது துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான காக்ரஜர் தீரஜ்(வயது 42), லாவோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கியோவாங்சா (வயது 28) ஆகியோர் உயிரிழந்தனர். 2 இந்தியர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா சிதறல்களை கைப்பற்றினர். #ThaiShooting #IndianTouristKilled
Tags:    

Similar News